உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அத்திக்கோம்பை கோயில் விழாவில் அம்மன் ஊர்வலம்

அத்திக்கோம்பை கோயில் விழாவில் அம்மன் ஊர்வலம்

ஒட்டன்சத்திரம்: கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில் திருவிழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. பல்வேறு ஸ்தலங்களில் இருந்து தீர்த்த கலசங்களில் கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. கிராம தெய்வங்கள் வழிபாடு, கரகம் பாலித்தல் அம்மன் ஊர்வலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். பொங்கல், மாவிளக்கு வழிபாடு , மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது. இதன் பின் முளைப்பாரி, வான வேடிக்கை , மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி