மேலும் செய்திகள்
தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல: தமிழிசை
13-Jan-2025
திண்டுக்கல்: தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லைக்காவலர் தியாகிகள் சங்க மாநிலத் தலைவர் ராசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வயது முதிர்ந்து கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ வசதி குறைவாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தி தியாகிகளுக்கு சிறப்பு மருத்துவ அட்டை வழங்கி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவதால் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் வழங்குவது போல் தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லையை மீட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.தமிழ்மொழி வளர்ச்சி, தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கு அரசு கல்லுாரிகளில் பயிற்சிகளிலும், வேலை வாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு இருந்தன. கருணாநிதி ஆட்சியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. தமிழக முதல்வர் வழக்கம்போல் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி, கல்லுாரிகளில் சேர்க்க இட ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
13-Jan-2025