உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீங்கள் நலமா; கலந்துரையாடிய அமைச்சர்

நீங்கள் நலமா; கலந்துரையாடிய அமைச்சர்

திண்டுக்கல்: 'நீங்கள் நலமா' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து அமைச்சர் பெரியசாமி பயனாளிகளுடன் அலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் திட்டமான 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு திட்டங்களின் பயன்பாடு, மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மேயர் இளமதி, ஊராட்சிக்குழுத் தலைவர் ,பாஸ்கரன், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், துணை மேயர் ராஜப்பா கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி