மேலும் செய்திகள்
வயல்வெளிகளில் மது பாட்டில்கள்; விவசாயிகள் புகார்
26-Nov-2024
பழநி: பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புரோக்கர்கள் போல் செயல்படுவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சப் கலெக்டர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.பழநி வருவாய் கோட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமையில் நடந்தது. டாக்டர் நேர்முக உதவியாளர் லீலாவதி, கால்நடை மருத்துவர் உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்துறை உதவி இயக்குனர் கவுசிகா தேவி பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விவசாயிகள் விவாதம் :பழனியப்பன், பூஞ்சோலை: எங்கள் பகுதியில் உள்ள குதிரை ஆற்றில் தண்ணீர் வந்ததால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. ஆண்டுதோறும் வெள்ள காலத்தில் இதுபோல் நடப்பது தொடர்கிறது.சப் கலெக்டர்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.சரஸ்வதி, இரவிமங்கலம்: விவசாய நிலத்திற்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.சப் கலெக்டர்: பட்டா வழங்குவது குறித்து ஒரு முறையான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.சக்திவேல், பெரியம்மாபட்டி: காட்டு பன்றிங்களால் தொல்லை ஏற்படுகிறது.சப் கலெக்டர்: வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.காளிதாஸ், பெரியம்மாபட்டி: வனத்துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை.சப் கலெக்டர்: விவசாயிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வரும் புரோக்கர்களிடம் விவசாயிகள் ஏமாற வேண்டாம்.அப்போது கூட்டத்திலிருந்து விவசாயிகள் சிலர் எழுந்து நின்று, எங்களில் சிலருக்கு எழுத படிக்கத் தெரியாது. அவர்களுக்கு சிலர் உதவி செய்கின்றனர். அவர்கள் புரோக்கர்கள் அல்ல. எங்களுக்கு உதவி செய்பவர்கள் அவர்களை குறை கூற வேண்டாம் என்றனர். சப் கலெக்டர்: விவசாயிக்கு உதவி செய்யும் நபர்கள் பணம் வாங்கிக் கொண்டு செய்தால் புரோக்கர்கள் என்று தான் அழைக்க வேண்டும். குமார், சத்திரப்பட்டி: வேலூர் ஊராட்சி பகுதியில் உள்ள மாந்திகண் ஓடை கரையை சிலரை துாண்டுதலால் பாதையாக மாற்றி வருகின்றனர். இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்.சப் கலெக்டர்: இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
26-Nov-2024