உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம்

திண்டுக்கல் : தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜாக்களி தலைமை வகித்தார். செயலர் காஜா மைதீன் வரவேற்றார். அமைப்புச் செயலர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். கவுரவத் தலைவர் சந்திரசேகரன், மாநில துணைத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநில மகளிர் அணி செயலர் சாந்தி பங்கேற்றனர். பழைய ஓய்வுதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர்,உயர்கல்வி ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த ஆண்டு நடைபெற்ற உபரி பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் பங்கேற்று பல்வேறு பள்ளிகளுக்கு மாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்தை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். 3 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ