உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் பேரூராட்சி கூட்டம்

அய்யலுார் பேரூராட்சி கூட்டம்

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். பதிவறை எழுத்தர் மோகன் வரவேற்றார். வணிக வளாக கடை , மாட்டுச்சந்தை, ஆடு அடிக்கும் உரிமம், ஆட்டோ, மினிவேன் நிறுத்த வசூல் போன்றவற்றிற்கு பொது ஏலம் விடுவது, கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை சுக்காம்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் அமைப்பது, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கொன்னையம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ