பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
எரியோடு: நாகையகோட்டை வைவேஸ்புரத்தில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 20வது ஆண்டாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முனியப்பன் கோயிலில் ஐயப்பன் கரகம் அலங்காரம் செய்ய சிறுவயது 7 பெண் குழந்தைகளை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து நெய் விளக்குகளை கையில் ஏந்தியவாறு கரகம் ஊர்வலமாக ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு வரப் பட்டது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காளியம்மன் கோயில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.