உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி கோவிலில் மேள தாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

பழனி கோவிலில் மேள தாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

பழனி:பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் மேளதாளம் இசைக்க தடை விதித்ததால் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த கரூர் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.இவர்கள் பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, கிரிவலப் பாதையில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மேளதாளங்களுடன் முருகன் கோவில் செல்வர்.நேற்று முன்தினம் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட மேளதாளங்களுடன் பாத யாத்திரையாக வந்த கரூர் பக்தர்கள், முருகன் கோவில் சென்றனர்.காவடிகளுடன் வந்த அவர்களிடம் 'மேளதாளம் அடித்து வர அனுமதி இல்லை' என கோவில் பாதுகாவலர்கள் கூறி வாக்குவாதம் செய்தனர்.இதை தொடர்ந்து, கோவில் உதவி கமிஷனர் லட்சுமியிடம், மேள தாளங்கள் இசைக்க அனுமதி கோரினர். அவரும் மறுத்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.ஹிந்து முன்னணி மதுரை கோட்டை பொறுப்பாளர் பாலன் கூறியதாவது:பழனி முருகன் கோவிலில் உயர் அதிகாரிகள் சிலர், பக்தர்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர்.அவர்கள் முருகன் கோவிலில் மேளதாளம் இசைக்க தடை விதித்து பக்தர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்.இது போன்ற அதிகாரிகளை பழனி கோவிலில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். மன அமைதியுடன் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வழி வகுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:மேளதாளம் மங்கல இசைக்கு முறையாக பயின்றவர்களை கொண்டு கோவில் பூஜை நேரத்தில் இறைவனுக்கு உகந்த இசை இசைக்கப்படுகிறது.ஆனால் தைப்பூச கூட்ட நேரத்தில் குழுவாக வரும் பக்தர்கள் சிலர், மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இசைக்கின்றனர். இவர்கள் முறையாக இசை பயின்றவர்கள் அல்ல.இதனால் கோவிலில் கூட்ட நேரத்தில் மேளதாளங்கள் இசைக்க அனுமதிக்க இயலாது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை