உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மகளிருக்கு பயிற்சியுடன் வங்கி கடன்

 மகளிருக்கு பயிற்சியுடன் வங்கி கடன்

திண்டுக்கல்: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 55 வயதுகுட்பட்ட மகளிர் உற்பத்தி, சேவை , வியாபாரம் சார்ந்த தொழில்களை துவங்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்கலாம். சொந்த முதலீடாக திட்ட மதிப்பில் 5 சதவீதம் செலுத்தி 95 சதவீதம் வங்கிக்கடனாக பெறலாம். வங்கியில் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மகளிருக்கு 3 நாள் தொழில் முனைவோர் பயிற்சியும், தேவையின் அடிப்படையில் திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. www.msmeonline.tn.gov.in/twees ல் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி,வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பிக்கும் போது ஆதார், ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, விலைப்புள்ளி பட்டியல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை