நீர் நிலைகளில் ஆபத்தை உணராது குளியல் ; மழைநேரம் என்பதால் தேவை விழிப்புணர்வு
-இளம் சிறார்கள் எப்போதும் துரு துருவென இருப்பர். இவர்களின் முதல் வாய்ப்பு டூவீலர்களை ஓட்டி பழகுவதே. அரைகுறையாக ஓட்டி பழகியவுடன் சாதிக்கப் போவதாக நினைத்து போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீர சாகசம் புரிகின்றனர். ஓவர் ஸ்பீடில் வாகனங்களை இயக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் உயிர் பலி, தலையில் பலத்த காயம், கை கால் உடைதல் என விபத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளது.தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக நிரம்பி வருகிறது. இது போல் கல் குவாரி பள்ளங்களும் நிறைந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் நண்பர்களுடன் குழுவாக சென்று நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் ஆழமான இடங்களுக்கு சென்று விபத்தில் சிக்குவும் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளின் ஆபத்தை தெளிவாக எடுத்து கூறி பெற்றோர்கள் சிறார்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.