விஜயால் விமர்சனங்களை வைக்க முடியாது சொல்கிறார் பா.ஜ., செயலாளர் கதலி நரசிங்க பெருமாள்
ஒட்டன்சத்திரம்: உலக அளவில் இந்தியா தான் வழிகாட்டியாக உள்ளதால் விஜயால் மிகப்பெரிய விமர்சனங்களை பா.ஜ., மீது வைக்க முடியவில்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டிச.27 ல் ஒட்டன்சத்திரம் வருகிறார். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கருப்புசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணன், லீலாவதி, மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ருத்ரமூர்த்தி பெரியசாமி, நகரத் தலைவர் குமார் தாஸ், ஒன்றிய தலைவர்கள் சதீஷ், நாட்டுத்துரை, மணிவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் முருகசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சரோஜா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறியதாவது: 11 வது இடத்தில் இருந்த இந்தியா பிரதமர் மோடி ஆட்சியில் 4வது பெரிய பொருளாதார சக்தி மிகுந்த நாடாக மாறி உள்ளது. விரைவில் 3வது நாடாக மாறும். பல்வேறு திட்டங்களில் உலக அளவில் இந்தியா தான் வழிகாட்டியாக, முன்னோடியாக உள்ளது. அதனால் தான் த.வெ.க., தலைவர் விஜயால் பா.ஜ., வை நோக்கி மிகப்பெரிய விமர்சனங்களை வைக்க முடியவில்லை என்றார்.