உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் அலுவலக வழியில் கல் ஊன்றி மறிப்பு

மின் அலுவலக வழியில் கல் ஊன்றி மறிப்பு

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் வேடசந்துார்: வேடசந்துார் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் வழியை நாடார் உறவின் முறையினர் பட்டா உள்ளதாக கூறி கல்நட்டு கம்பி வேலி போட முயற்சி செய்தனர். இதை மின்வாரிய ஊழியர்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் மின் அலுவலகம் செல்லும் வழி நாடார் உறவின்முறைக்கு சொந்தமானதாக கூறி கல் நட்டனர்.கம்பி வேலி அமைக்க முயன்றபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மின்வாரிய அதிகாரிகளிடம் உங்களுக்கான ஆதாரங்களையும் கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை