உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நீதிமன்றத்தில் புத்தக கண்காட்சி

 நீதிமன்றத்தில் புத்தக கண்காட்சி

நத்தம்: நத்தம் நீதிமன்ற வளாகத்தில் நியூ செஞ்சூரியன் புக் ஹவுஸ் சார்பாக புத்தக கண்காட்சி நடந்தது. இதை நத்தம் நீதிபதி ஆப்ரின் பேகம் திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.நத்தம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார், செஞ்சூரியன் புக் ஹவுஸ் மண்டல மேலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இரு நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் விதத்தில் விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. செஞ்சூரியன் புக் ஹவுஸ் துணை மேலாளர் அய்யப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ