உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கு தள்ளுபடி அ.தி.மு.க.,வினர் உற்சாகம்

வழக்கு தள்ளுபடி அ.தி.மு.க.,வினர் உற்சாகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர அ.தி.மு.க.,சார்பில் உச்சநீதி மன்ற வழக்கு தள்ளுபடி தீர்ப்பை தொண்டர்கள் கொண்டாடினர்.திண்டுக்கல் மாநகர அ.தி.மு.க., சார்பில் உச்சநீதிமன்றத்தின் அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்று பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் தொண்டர்கள் கொண்டாடினர். பகுதி செயலாளரகள் மோகன், சேசு, . சுப்பிரமணி, முரளி முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் வரவேற்றனர். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட கடை பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாணவரணி செயலாளர் சின்னு, ஒன்றிய பொருளாளர் மகாராஜன், துணை செயலாளர் கனிராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர்கள் அழகு மணிகண்டன், பிரபு பங்கேற்றனர். தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ