உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு 2 நாட்களுக்கு தண்ணீர் சப்ளை இல்லை

 காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு 2 நாட்களுக்கு தண்ணீர் சப்ளை இல்லை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 2 நாட்களுக்கு தண்ணீர் சப்ளை இருக்காது என அதிகாரிகள் கூறினர். கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் பாளையம் குஜிலியம்பாறை, கோவிலுார் வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கான காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. திண்டுக்கல் கரூர் ரோட்டில் தொட்டனம்பட்டியில் இருந்து டி.கூடலுார் வரை உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றிய போது கோவிலுாரிலிருந்து குஜிலியம்பாறை, பாளையம் வரை 15 கி.மீ.,துாரத்திற்கு ஆங்காங்கே விட்டு விட்டு குழாய் பாதை மீது தார் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்களின் போக்குவரத்து, நீர் அழுத்தம் காரணமாக குழாய் அவ்வப்போது உடைவது தொடர்கதையாக உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட குடிநீர் ரோட்டில் ஓடியது. நேற்று சீரமைக்கும் பணிகள் துவங்கிய நிலையில் நாளை மறுநாள் ( நவ.22 ) குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ