உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சப்பரம் நிறுத்தம் பிரச்னை; தர்ணா

சப்பரம் நிறுத்தம் பிரச்னை; தர்ணா

திண்டுக்கல் : சப்பரம் நிறுத்தம் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் ஏ.எம்.சி., ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தை பெருமாள் கோயில் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 2ம் நாளாக நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.அம்பாதுரையடுத்த பெருமாள் கோவில்பட்டி ஊரின் மையத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அருகில் கிறிஸ்தவ வன்னியர்கள் சப்பரத்தை நிறுத்துவது தொடர்பாக 150 ஆண்டுகளாக பிரச்னை இருந்தும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளனர். இதை நிறைவேற்றாததால் நேற்று முன் தினம் மாலை திண்டுக்கல் ஏ.எம்.சி., ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஊர்மக்கள் குவிந்தனர். ஆர்.டி.ஓ.,பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர். இதை தொடர்ந்து நேற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை