உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சர்ச்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பின் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் சர்ச்சில் இயேசு பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. திராளானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். 96 பட்டியலில் தாய் கிராமமாக விளங்கக்கூடிய மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை சர்ச்சில் பாதிரியார் செல்வராஜ், உதவி பாதிரியார் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 12:00 மணிக்கு குழந்தை இயேசுவின் கிறிஸ்து பிறப்பானது நடந்தது. இந்நிகழ்வின்போது மழை பொழிந்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி கிறிஸ்து பிறப்பு வை கண்டு மகிழ்ந்த மக்கள் ஆனந்தத்தில் ஒருவரை ஒருவர் கை குலுக்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறினர். கிறிஸ்து பிறப்பு பக்தி பாடல்கள் இசை முழங்க பாதிரியார்களால் திருப்பலிகள் நிறைவேற்ற பட்டது. திருப்பலியில் பங்கேற்றவர்கள் வாழ்த்துக்களை பரிமாறி கேக், இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். கிறிஸ்து பிறப்பின் அடையாளமாக நட்சத்திர மின்னொலியில் சர்ச்கள் மட்டுமன்றி பல வீடுகளும் அலங்காரமாய் காட்சியளித்தது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்,குமரன் திருநகர் ஆரோக்கியமாதா சர்ச், என்.ஜி.ஓ., காலனி ஆரோக்கிய அன்னை சர்ச், மாரம்பாடி அந்தோணியார் சர்ச்,மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச், மரியநாதபுரம் உட்பட பல சர்ச்களில். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.வடமதுரையில் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் நேற்று அதிகாலை போதகர் பெஞ்சமின் தலைமையில் கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. திருமண்டல உறுப்பினர்கள் டேவிட், சாந்திஅருள், மோசஸ் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் ஆராதனை ஏற்பாட்டினை செய்தனர்.ஒட்டன்சத்திரம், தும்மிச்சம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், சத்தியநாதபுரம், விருப்பாச்சி, பெரியகோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் நடந்த வழிபாடுகளில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாறினர். விழாவை முன்னிட்டு பல இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்புகள் நடந்தது.கன்னிவாடி:குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சவுந்தர் தலைமையில் சிறப்பு திருப்பலி கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது. சிறப்பு விழா திருப்பலிகள் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் குடில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார்.ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் சர்ச் மட்டுமன்றி வீடுகளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை