உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் கோப்பை கிரிக்கெட் - விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி

முதல்வர் கோப்பை கிரிக்கெட் - விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல் : முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது.முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் செப் 10ல் தொடங்கி செப். 24 வரை பல்வேறு இடங்களில் நடக்கின்றன. கிரிக்கெட் போட்டிகள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லுாரி, ஜி.டி.என்., கல்லுாரி மைதானங்களில் நடைபெற்றன. மாவட்டத்திலிருந்து 31 அணிகள் கலந்து கொண்டன. ஆடவர்களுக்கான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சாமியார் தோட்டம் கிரிக்கெட் கிளப் அணி , விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிய மோதின. முதலில் பேட்டிங் செய்த சாமியார் தோட்டம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. முகமது யூசூப் 25, பிரபாகரன் 35 ரன்களும், கார்த்திக் சரண் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிவமுருகன் 40, ஸ்ரீமுருகேஸ்வரன் 43, கார்த்திக் சரண் 27 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை