மேலும் செய்திகள்
ஸ்ரீவித்யா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
21-Sep-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே கிரியம்பட்டி ஸ்ரீவீ கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் சுதந்திரம், செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தனர். முதல்வர் அசோகராஜன், முன்னிலை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம்,செஞ்சிலுவை சங்க சேர்மன் காஜாமைதீன் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர். இதில், சென்னை பாலக் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரஞ்சிதா சுதந்திரம் வாழ்த்தினார். கல்லூரியின் ஆளுமை திறன் இயக்குனர் சாந்தி, தொழில் வழிகாட்டி இயக்குனர் பிரியா, மதுரை இணை பேராசிரியர் பிரபாகரன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
21-Sep-2025