உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்

துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்

திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,துணை மேயர் ராஜப்பா,மாநகர நல அலுவலர் முத்துக்குமார் திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப்பிடம் கொடுத்த மனுவில், மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி மேற்கொள்ளப்படுகிறது. செப்.23 ல் காலை திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் துாய்மை பணியாளர்களை பணிக்கு அனுப்பினோம். அவர்களும் துாய்மை பணியில் ஈடுபட்டனர். துாய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த காளிராஜ் நகரில் துாய்மை பணிகள் நடப்பதை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை