மேலும் செய்திகள்
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
22-May-2025
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் ஆண்டு பொது குழு கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார் .துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கோபி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.இதை தொடர்ந்து நடந்த பொது குழு தேர்தலில் தலைவராக சுரேஷ்குமார், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக கோபி, துணைத் தலைவர்களாக சண்முகவேல், கிரிஜா இணைச் செயலாளர்களாக பழனிக்குமார், விஜயலட்சுமி,செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வழக்கறிஞர் நடராஜ், பழநி ரயில் பயணங்கள் நலச் சங்கத் தலைவர் நாகேஸ்வரன், கவுரவ ஆலோசகர்கள் ரகுமான்சேட், துளசிராம், டாக்டர் ஆசை தம்பி தேர்தல் அலுவலர்களாக செயல்பட்டனர்.
22-May-2025