உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: ஆதித் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஆதித் அணி வெற்றி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில்ஆதித் அணிவெற்றி பெற்றது.திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா கிரிக்கெட் கிளப் அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாலாஜி 5, விக்னேஷ் கணபதி 4 விக்கெட்கள் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் கிரிக்கெட் கிளப் அணி 15.3 ஓவர்களிலே 2 விக்கெட்கள் இழந்து 80 ரன்களுடன் வெற்றி பெற்றது. முருகானந்தம் 48 ரன்கள் எடுத்தார்.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிசன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பழநி யுவராஜ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. வீரமலை 57, பேரறிவாளன் அறிவு 53 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 119 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. உதயகுமார் 44 ரன்களும், நிரஞ்சன், பிரபு ஆகியோர் தலா 3 விக்கெட்களும் எடுத்தனர்.ரிச்மேன்மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன் போட்டியில் கொடைரோடு கொடை கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. சுரேஷ் 33, மதன் பிரகாஷ் 31 ரன்களும், வடிவேல் 3 விக்கெட்டுகளும் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஆதித் கிரிக்கெட் கிளப் அணி 24.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரகதீஸ்வரன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ