உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக் போட்டி: பழநி டோமினேட்டர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக் போட்டி: பழநி டோமினேட்டர்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியில் பழநி டோமினேட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய திண்டுக்கல் ஹரிவர்ணா சி.சி. அணி 45 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256ரன்கள் எடுத்தது. அரவிந்த் 97, முனீஜ்குருசரண் 25, கிஷோர்குமார் 25, கவுதம் 30, முகமதுஅப்துல்லா 38ரன்கள், பொன்சக்தி பிரபாகரன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த பழநி டோமினேட்டர்ஸ் சி.சி. அணி 44 ஓவரில் 7 விக்கெட் இழந்து 262 ரன்கள் எடுத்து வென்றது. சுலைமான் 36, கார்த்திகேயன் 43, மதன்குமார் 61, ஸ்ரீராம் வசந்த்பிரசாத் 30, நசீர் உசேன் 53(நாட்அவுட்), அபிஷேக் 3 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய ஒட்டன்சத்திரம் நைக் சி.சி. அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 182ரன்கள் எடுத்தது. அருண்நிஷாந்த் 41,மகேந்திரன் 81ரன்கள், ஸ்ரீதர் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த அய்யலுார்கிளாசிக் சி.சி. அணி 22.5 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஞானபிரகாஷ் 67ரன்கள், பிரகாஷ் 3 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடியதிண்டுக்கல் ஆரஞ்சு ஷர்ட்ஸ் சி.சி. அணி 30 ஓவரில் 7 விக்கெட் இழந்து 191ரன்கள் எடுத்தது. விஸ்வநாதன் 40, ஜெயகாந்தன் 65(நாட்அவுட்)ரன்கள், விக்னேஷ் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த எரியோடு ஸ்கில் சி.சி.அணி26 ஓவரில் 99ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. பனுவலட்டி 5 விக்கெட் எடுத்தார்.ஸ்ரீ.வீ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய நிலக்கோட்டை வாரியர்ஸ் சி.சி. அணி 22.2 ஓவரில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அருண்குமார் 36ரன்கள், .பூபதிராஜா 6 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் சி.சி. அணி 23.5 ஓவரில் 8 விக்கெட் இழந்து 105ரன்கள் எடுத்து வென்றது. அருண்குமார் 4 விக்கெட் எடுத்தார். ஸ்ரீ.வீ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக். போட்டியில் ஆடிய திண்டுக்கல் ஆல்ரவுண்டர்ஸ் சி.சி. அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து 119ரன்கள் எடுத்தது. பிரசாந்த் 32ரன்கள், சுந்தர் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் சி.சி. அணி 21.4 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. சம்பத்குமார் 30ரன்கள், பிரசாந்த், பாக்கியராஜ் தலா 3 விக்கெட் விக்கெட் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி