விருதலைப்பட்டியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
வேடசந்துார், வேடசந்துார் விருதலைப்பட்டி ஓடையில் இருந்த 24 மரங்களை மண் அள்ளும் இயந்திரத்தைக் கொண்டு வேருடன் பிடுங்கிப் போட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து மரங்களை அகற்றுவது நிறுத்தப்பட்டது. விருதலைப்பட்டி வி.ஏ.ஓ., மகேஸ்வரன் கூறும்போது , விருதலைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிற்றோடையில் உள்ள மரங்களை பிடுங்கி உள்ளனர். கேட்டால் பைப் லைன் சேதமாவதால் பிடுங்கினோம் என்கின்றனர். முறையான அனுமதி இல்லாத நிலையில் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். அகற்றிய மரங்கள் காய்ந்து வீணாவதற்குள் அதை முறையாக ஏலம் விட நிர்வாகம் முன் வர வேண்டும்.