உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான ரோடுகள்... துரத்தும் தெரு நாய்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்

சேதமான ரோடுகள்... துரத்தும் தெரு நாய்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்

திண்டுக்கல்; சேதமான ரோடுகள்,ஒருபுறம் மட்டும் அமைக்கப்பட்ட வடிகால்கள்,மழை நேரங்களில் மண் ரோடுகளால் சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், துரத்தும் தெரு நாய்கள், கடித்து குதறும் கொசுக்கள் என ஏராளமான பிரச்னைகளில் திண்டுக்கல் செல்வி நகர் குடியிருப்போர் பாதிக்கின்றனர். திண்டுக்கல் திருச்சி ரோடு செல்விநகர்,பசும்பொன்நகர், எம்.ஆர்.எஸ்.நகர் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் முருகானந்தம்,செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: தெருக்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் சேதமாக உள்ளது. முள்ளிப்பாடி ஊராட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள ரோடுகளை சீரமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஒருபுறம் மட்டும் வடிகால்கள் அமைத்துள்ளனர். இதனால் மழை நேரங்களில் கழிவுநீருடன் மழைநீர் ரோட்டில் ஓடுகின்றன. இங்கு சமூக விரோத செயல்களும் அதிகளவில் நடக்கின்றன. எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிந்து மக்களை கடிக்கின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ரோடெங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதால் விஷபாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது. சில நேரங்களில் தெரு நாய்கள் வெறி பிடித்து துரத்துகின்றன. ஊராட்சி நிர்வாகத்தினர் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் மழைநீர், கழிவுநீர் செல்ல சாக்கடை, வடிகால்கள் பல ரோடுகளில் இல்லாமல் உள்ளது. கொசு உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. இதன்மூலம் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அமைக்கப்பட்ட வடிகால்கள் துார்வாராமல் இருப்பதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை