உள்ளூர் செய்திகள்

வாலிபர் இறப்பு

வடமதுரை : எரியோடு அருகே எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சோனமுத்து 24. திருப்பூரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்த இவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போது எல்லாம் தனக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி பெற்றோரிடம் தகராறு செய்தார். 4 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சோனமுத்து நேற்று முன்தினம் மது அருந்தி தந்தை சின்னச்சாமியுடன் தகராறு செய்து, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். இதனால் சின்னச்சாமி அருகில் இருந்த மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது சோனமுத்து, இறந்து கிடந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை