உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் பிரசாத பொருட்கள் பேக்கிங் முறையை மாற்ற முடிவு

பழநி கோயில் பிரசாத பொருட்கள் பேக்கிங் முறையை மாற்ற முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி:''பழநி கோயில் பிரசாத பொருட்கள் தயாரிக்க பயன்படும் எண்ணெய் வாசனை போக்க பொருட்களின் பேக்கிங் முறையை மாற்றி அமைக்க உளளதாக,'' அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார்.பழநி கோயிலில் பஞ்சாமிர்தம், முறுக்கு, லட்டு, அதிரசம், தினை மாவு, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது.காலாவதி தேதி முடிவுற்ற பிரசாத பொருட்கள் கோயில் விற்பனை நிலையங்களில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிரசாதம் தயாரிப்பு நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இது போல் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தலைமையில் இணை கமிஷனர் பாரதி, உறுப்பினர்களும் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர்.அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது: கோயில் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்தில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் இல்லை. தயாரிப்பு தேதியில் இருந்து 15 நாள் வரை பயன்படுத்தும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை மேலும் 15 நாட்கள் பயன்படுத்த இயலும் என்பதை ஆய்வு செய்து பஞ்சாமிர்த டப்பாவில் பதிவு செய்ய உள்ளோம்.பிரசாத பொருள் கவர்களிலும் காலாவதி தேதி குறிப்பிடப்பட உள்ளது. பொருட்கள் தயாரிக்க பயன்படும் எண்ணெய் வாசனையை போக்க பொருட்களின் பேக்கிங் முறையை மாற்ற உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.அதன்படிபிரசாத பேக்கிங் கவர்களை மாற்றி அமைக்க உள்ளோம். எண்ணெய் டிரையர் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ