உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநிக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழநிக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,5 முதல் நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த பக்தர்கள் 41 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருகின்றனர். நேற்று வீரதுர்க்கை அம்மன் கோயில் முன்பு அலகு குத்தி, ஒரு கிரேனில் நான்கு நபர்கள் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்ட பறவை காவடி எடுத்து வந்தனர்.சேலம் மாவட்டம் புது ரோடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த பக்தர்கள் என பலர் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடி கிரி வீதியில் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை