உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தையை கொன்று தாய் தற்கொலை

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிக்கராம்பட்டியில், குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்து கொண்டார். இக்கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், கொத்தனார்; இவரது மனைவி மல்லிகா (30), மகள் காளீஸ்வரி (6). கோபால கிருஷ்ணன் குடிப்பழக்கத்தால் குடும்பத்தை கவனிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மல்லிகா, நேற்று முன்தினம் இரவு, மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். 'கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக,' பெண்ணின் தந்தை வேலுச்சாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ