உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜாதி சான்றிதழ்களை பள்ளியில் வழங்க முடிவு

ஜாதி சான்றிதழ்களை பள்ளியில் வழங்க முடிவு

திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, இருப்பிடச்சான்று, வருமானச்சான்றிதழ்களையும் பள்ளியிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ல் அந்தந்த பள்ளி தலைமை ஆசியிர்கள் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் ஜாதி சான்றிதழ், இதரசான்றுகளுக்கான விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒப்படைத்து ஒப்புதல் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட ஆர்.ஐ.,யிடம் அறிக்கை பெற்று சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளியில், துணை தாசில்தார்கள் வழங்க வேண்டும். இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் 26 ஆயிரத்து 435 மாணவ, மாணவிகளுக்கும், பிளஸ் 2 படிக்கும் 17 ஆயிரத்து 456 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 43 ஆயிரத்து 891 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை