உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்சி பொருளான மொபைல் டவர்

காட்சி பொருளான மொபைல் டவர்

வடமதுரை : பிலாத்து கிராமத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எரியோடு, அய்யலூர், வடமதுரையில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர்கள் உள்ளன. இந்த மூன்று பேரூராட்சிகளுக்கும் இடையே மையப்பகுதியான பிலாத்து, தென்னம்பட்டி, சித்துவார்பட்டி, கொம்பேரிபட்டி, ஒத்தப்பட்டி, ஆண்டிப்பட்டியில் 'சிக்னல்' சரிவர கிடைப்பதில்லை. இக்குறையை நீக்க, மையப்பகுதியான பிலாத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன், டவர் நிறுவப்பட்டது. இதுவரை செயல்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ