உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி அருகே பெரியூர் மாகாளியம்மன், செல்வவிநாயகர், திருமலை பகவான் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சாமி நரசிம்ம அடிகள் தலைமையில் கணபதி பூஜை, மகாசங்கல்பம், தேவதா அனுக்கைஞ, புண்யா வாகனம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து முதல் யாககால பூஜை தொடங்கி, இரண்டாம் கால பூஜையில் திருமுறைப் பாராயணம், நாடி சந்தனம், ஸ்பர்ஷாகுதி, பூர்ணகுதி தீபாராதனையுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மஹாஅபிஷேகம் தீபாராதனை நடந்தது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., நத்தம் தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரவை செயலாளர் சக்திசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை