திண்டுக்கல் நீதிபதிக்கு கவுரவம்
திண்டுக்கல்: நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து அதிக வழக்குகளுக்கு தீர்வு காணும் நீதிபதிகளை கவுரவிக்கும் வகையில் சுழற்கோப்பை, கேடயம் வழங்குவதை சென்னை உயர்நீதிமன்றம் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் ஒவ்வொரு மாதமும் நீதிபதிகள் விசாரித்து முடிக்கும் வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டு உயர்நீதிமன்ற பார்வைக்கு அனுப்பப்பட்டு வந்தது. அந்தவகையில் அதிக வழக்குகள் விசாரித்து தீர்வுக்கண்ட நீதிபதிகள் பட்டியலில் திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிபதி ஆனந்தி தொடர்ந்து 3 மாதங்கள் முதல் இடம் பிடித்தார். இதையொட்டி அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நீதிபதி முத்துசாரதா கேடயம் வழங்கி கவுரவித்தார்.