உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெண்மை புரட்சி: ஆவின் புது திட்டம்

வெண்மை புரட்சி: ஆவின் புது திட்டம்

திண்டுக்கல்:மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க, ஆவின் மூலம் சிபாரிசு செய்யப்படுபவர்களுக்கு, கூட்டுறவு வங்கியில் கறவை மாடுக்கான கடன் வழங்கப்படுகிறது. பழநி பகுதியில் மானியத்துடன் கூடிய கூட்டுறவு கடனில், விவசாயிகளுக்கு இதுவரை 150 கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பழநி அருகே கணக்கன்பட்டி, வலசகவுண்டனூர், பச்சளநாயக்கன்பட்டி, சின்னக்கலையம்புத்தூர் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிற்பட்டோருக்கு 25, ஆதிதிராவிடருக்கு 33 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. பயனாளிகள் அப்பகுதியிலுள்ள கூட்டுறவு பால் சங்கத்தில் பாலை ஊற்றி வங்கிக்கடனை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும்; கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ