உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

பழநி:பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரி முப்பெரும் விழா நடந்தது.மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிகர் பேசியது:புதிய சட்டபை வளாகத்தில் அமைக்க உள்ள மருத்துவமனை யை, 'எய்ம்ஸ்' தரத்துக்கு இணையாக செயல்படுத்த வேண்டும். தியேட்டர்களில் இரவுநேர காட்சியை ரத்து செய்ய வேண்டும். பஸ்களில் ஆடியோ, வீடி யோ உபகரணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இறுதி மூச்சுவரை தாய், தந்தையை மறக்கக்கூடாது. தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஊழலற்ற நாட்டை உருவாக்குவதில், அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம், ஒரு அடிக்கல்லாக அமைந்துள்ளது, என்றார்.ஆர்.வி.எஸ்., கல்விக்குழும தலைவர் குப்புசாமி, கல்லூரி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் பாபுராஜன், நிர்வாக அறங்காவலர் சந்திரன், முதல்வர் ராஜப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ