உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோர குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டோர குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

அச்சுறுத்தும் நாய்கள் திண்டுக்கல் பழநி ரோடு அருகே சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர் .டூவீலர்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் வேகமாக செல்ல விபத்துக்களில் சிக்குகின்றனர்.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன், திண்டுக்கல்............--------முகம் சுளிக்கும் பக்தர்கள் பழநி இடும்பன் கோயில் அருகே வள்ளியப்பா கார்டன் நுழைவு பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளது .அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.பூபதி, பழநி.......--------சர்வீஸ் ரோட்டில் தேங்காய் மட்டை திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் தேங்காய் மட்டைகளை கொட்டுகின்றனர். இதனால் மட்டையில் மழைநீர் தேங்க கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது .இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமதி,திண்டுக்கல். .................--------- சாக்கடையில் தேங்கும் கழிவு வடமதுரை 1வது வார்டு எல். ஐ. சி. காலனி முதல் வடமதுரை - தும்மலக்குண்டு மெயின் ரோடு பகுதி வரையிலான சாக்கடையில் பல நாட்களாக கழிவுகளை அகற்றாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.மழை பெய்தாலே கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. எஸ்.செந்தில், வடமதுரை...............--------- ரோடு சேதத்தால் விபத்து திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் ரோடு சேதமடைத்து பயன்படுத்தமுடியாத நிலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்கள் தெரியாமல் விபத்து நடைபெறாது தடுக்க வேண்டும் .ராஜன், ரோஜா நகர்......... சேதமான சாக்கடை பாலம் பழநி பெரியப்பா நகர் 4வது தெருவில் சாக்கடை பாலம் சேதமடைந்து பல நாட்களாக அப்படியே உள்ளதால் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது .இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது .சாக்கடையை சரி செய்ய வேண்டும். மருதுபாண்டியன், பழநி. ...........---------குளத்தில் கொட்டப்படும் கழிவு பாகாநத்தம் அருகே ரோட்டோர குளத்தில் கழிவு பொருட்களை சிலர் கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக இங்கு கொசுக்கள் உருவாக சுற்றுப்பகுதியில் தொற்று பரவலும் தாரளமாகிறது .இங்கு கழிவு கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --முருகன், எரியோடு. ............---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை