உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்ட பாட்மின்டன்: திண்டுக்கல் அணி வெற்றி

மாவட்ட பாட்மின்டன்: திண்டுக்கல் அணி வெற்றி

வத்தலக்குண்டு: - ஜெயம் பாட்மின்டன் அகாடமி சார்பில் மூன்று மாவட்ட அளவிலான ஆண்கள் இரட்டையர் இறகு பந்து போட்டி வத்தலக்குண்டில் நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 30க்கு மேற்பட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர். எஸ். ஐ., சேக் அப்துல்லா துவக்கி வைத்தார்.இறுதி போட்டியில் தேனி, திண்டுக்கல் அய்யம்பாளையம் இரட்டையர் அணி மோதியதில் திண்டுக்கல் மாவட்ட அணி வெற்றி பெற்றது.இதற்கான பரிசளிப்பு விழாவில் தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் கோபாலன் கோப்பை, பரிசுகளை வழங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை