உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளால் இடையூறு

மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளால் இடையூறு

குவி லென்ஸ் சேதம் : திண்டுக்கல் அருகே எம்.எம்.கோவிலுார் ரோட்டில் குவி லென்ஸ் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கிறது. விபத்தை தடுக்க குவி லென்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--அன்னபூரணி, திண்டுக்கல்.மின் கம்பி மீது உரசும் மரக்கிளை : மாரம்பாடி அருகே கஸ்துாரி நகர் பகுதியில் மின் கம்பிகள் மீது மரங்கள் உரசுவதால் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. மழை நேரங்களில் தீப்பொறியும் ஏற்படுகிறது. மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.-சந்திரசேகர், மாரம்பாடி.பள்ளமான ரோடு : ஒட்டன்சத்திரம் நகராட்சி செக்போஸ்ட் ரவுண்டானாவில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டின் கிழக்கு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீராச்சாமி, ஒட்டன்சத்திரம்.---------சாய்ந்த மின் கம்பம் : திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகம் அருகே அரசு குடியிருப்பு ரோட்டில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-காமராஜ், திண்டுக்கல்.கால்வாயில் கழிவுநீர் தேக்கம் : திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக நுழைவுவாயில் அருகே கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்துள்ளது. இதனால் கொசுக்கள் புழுக்கள் உருவாகும் இடமாக உள்ளது. இதை சுத்தப்படுத்த வேண்டும்.-சின்னதம்பி, திண்டுக்கல்.கொசுக்கள் உற்பத்தி ஜோர் : பழநி அருகே நெய்க்காரப்பட்டி 12வது வார்டில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. -முகமதுஜின்னா, மானுார் .குவியும் குப்பை : நிலக்கோட்டை ஒருங்கிணைந்த அரசு கட்டட பகுதியில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது. இதில் மதுபாட்டில், பிளாஸ்டிக் கப் ஏராளமாக உள்ளன.தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வகுமார், நிலக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ