மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
06-Nov-2024
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநகர தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், மாநகர மேயர் இளமதி முன்னிலை வகித்தனர். துணைமேயர் ராஜப்பா வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை சட்டசபை தொகுதி பார்வையாளர் கோவிந்தசாமி பேசினார். மாநகர துணை செயலாளர் முகமது சித்திக், அழகர்சாமி, பொருளாளர் சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், பகுதி செயலாளர்கள் சந்திரசேகரன், ராஜேந்திர குமார், ஜானகிராமன், பஜ்ருல் ஹக் பங்கேற்றனர்.நிலக்கோட்டை: நிலக்கோட்டை மேற்கு, தெற்கு, வடக்கு ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான கம்பம் பாண்டியன் தலைமையில் நடந்தது. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிட முகவர்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.ஒன்றிய செயலாளர்கள் கரிகால பாண்டியன், மணிகண்டன், சவுந்திர பாண்டியன், பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை பங்கேற்றனர்.
06-Nov-2024