நத்தத்தில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
நத்தம்: நத்தத்தில் உள்ள அரசு சமுதாய கூடத்தில் தி.மு.க., சார்பாக ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், மாவட்ட பொருளாளர் க.விஜயன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஓட்டுச்சாவடி மையங்களில் முகவர்கள் செயல்பட வேண்டிய விதம் ,புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி இப்ரில் ஆசித், சுற்றுச்சூழல் அணி ராஜகோபால், மாணவரணி சிவா, நகர இளைஞரணி சேக்சிக்கந்தர் தாரிக், நெசவாளர் அணி மோகன் கலந்து கொண்டனர்.