மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?
14-Oct-2025
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுாரில் ஒரு மாதமாக நீடிக்கும் குடிநீர் பிரச்னையை கண்டித்து ஊராட்சி அலுவலகம் , டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர். மன்னவனுார் ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு உள்ளது. வனப்பகுதியிலிருந்து நகர் பகுதியை வந்தடையும் பைப்லைன் அடிக்கடி சேதமடைந்து குடிநீர் சப்ளை பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. ஒரு மாதமாக நீடிக்கும் இப்பிரச்னை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் ஊராட்சியில் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இது போல் அங்குள்ள டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட்டு அதற்கு பூட்டு போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். பி.டி.ஓ., பிரபா ராஜா மாணிக்கம் பேச்சுவார்தை நடத்தினர் சில தினங்களில் குடிநீர் பிரச்னை சீர் செய்வதாக உறுதியளிக்க கலைந்து சென்றனர்.
14-Oct-2025