உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போதையில் சம்மட்டியால் அடித்து மனைவி கொலை: கணவர் கைது

 போதையில் சம்மட்டியால் அடித்து மனைவி கொலை: கணவர் கைது

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே குடிபோதையில் சம்மட்டியால் அடித்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு 35. டிராக்டர் டிரைவராகவும், மெக்கானிக்காகவும் வேலை செய்து வந்தார். இவர் ஈஸ்வரி 32, என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிஷ் குமார், கவின் ஆகிய 2 மகன்கள், துளசிமணி என்ற மகள் உள்ளனர். பிரபு ஈஸ்வரி ஊரான பிடாரிகோட்டம் பகுதி யில் வசித்து வந்தார். குடிப் பழக்கத்திற்கு அடிமையான தால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற் பட்டது. நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு சம்மட்டியால் தாக்கி யதில் ஈஸ்வரி இறந்தார். பிரபுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ