உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோரம் குப்பை கொட்டுவதால் தொற்று பரவலுக்கு வாய்ப்பு

ரோட்டோரம் குப்பை கொட்டுவதால் தொற்று பரவலுக்கு வாய்ப்பு

மரத்தில் ஆணி : திண்டுக்கல் - சிலுவத்துார் ரோட்டில் மரத்தில் ஆணி அடித்து விளம்பர பலகைகளை தொங்க விடுகின்றனர் . மரங்கள் பட்டு போக வாய்ப்புள்ளது . இதை கருதி ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும்.--அமுதா, திண்டுக்கல்.சேதமான அடிகுழாய் : திண்டுக்கல் சுண்ணாம்பு காளவாசல் நகரில் ரோட்டில் அடிகுழாய் சேதமடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. சேதமடைந்து துருப்பிடித்து வீணாகிறது .போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிகுழாயை அகற்ற வேண்டும்.-நாதன், திண்டுக்கல்.மின்கம்பத்தில் செடிகள் : திண்டுக்கல் நத்தம் ரோடு விராலிப்பட்டி அருகே மின்கம்பம் முழுவதும் செடிகள் மறைத்துள்ளது இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். செடிகளை அகற்ற வேண்டும்.-மயில்சாமி, விராலிப்பட்டி.கழிவுநீர் தேங்கி பள்ளம் : திண்டுக்கல் சி.டி. ஓ., காலனி முதல் தெருவில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. விபத்து முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-மகேஸ்வரன், திண்டுக்கல்.குப்பையால் பாதிப்பு : ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் கொல்லபட்டி பிரிவு எதிரே குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.இதன் காரணமாக கொடிய நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதை கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். - --குப்புசாமி ஒட்டன்சத்திரம்.கழிவுகளால் நோய் தொற்று : வடமதுரை திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலை நால்ரோடு சந்திப்பதில் பாலத்தில் கழிவு பொருட்கள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்வோர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதை அகற்ற வேண்டும்.---சரவணன், வடமதுரை.குடிநீர் தொட்டியை சுற்றி செடிகள் : திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி அன்னை நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டியை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. விஷ பூச்சிகள் அதிக அளவில் வருகிறது. இதை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திகேயன், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை