உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி கண்காட்சி

 இராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி கண்காட்சி

நத்தம்: நத்தம், காட்டுவேலம்பட்டி இராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் ராம்சன்ஸ் எக்ஸ்போ -2025 என்ற தலைப்பில் கல்வி கண்காட்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி தையல்நாயகி, பள்ளி முதல்வர் எழில், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில் என்.பி.ஆர்., நர்சிங் கல்லூரி ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் அன்னலெட்சுமி, ராஜபாளையம் சி.சி., அக்கடமி சீனியர் கெசண்டரி பள்ளி தாளாளர் கணேசன் கலந்து கொண்டு கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். 8ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் சார்ந்த நிகழ்வுகள் குறித்தும், கணிதம் மற்றும் சமூக அறிவியல் கோட்பாடுகளை வடிவமைத்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, கண்காட்சிக்கு வந்த பெற்றோர்களை கை கொடுத்து வரவேற்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி