உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு

 ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு

வத்தலக்குண்டு: திருச்சியைச சேர்ந்த மின் மோட்டார் நிறுவன ஊழியர்கள் கொடைக்கானலுக்கு மோட்டாருக்கு அதிக அழுத்தம் தரும் மின் சாதனத்துடன் சென்று விட்டு மாற்று மின்சாதனத்துடன் தனியார் பஸ்சில் திரும்பினர். பையில் வைத்திருந்த மின் சாதனம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இறங்கும்போது காணாமல் திடுக்கிட்டனர். ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மின் சாதனம் திருட்டு குறித்து ஊழியர் குமரேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போலீசார் மஞ்சளாறு பாலம் அருகே பஸ் நின்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் மின்சாதன பையோடு இறங்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் மின் சாதன பொருளை திருடி சென்றவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை