உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மயானப்பாதை பிரச்னைக்கு முடிவு

மயானப்பாதை பிரச்னைக்கு முடிவு

வடமதுரை: புத்துார் பிச்சம்பட்டி கிராமத்தினர் வண்டிப்பாதையாக பயன்படுத்திய வழியில் தனியார் நிலம் இருந்தது. நிலத்தின் உரிமையாளர் இரும்பு கம்பிவேலி அமைத்த நிலையில் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வழியில் தான் இறுதி ஊர்வலம் செல்வோம் எனக்கூறி நிலத்தில் வேலியை தாண்டி இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுபோன்ற ஊர்வலம் நடக்கும் நிலையில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்படும் நிலை இருந்தது. சில மாதங்களில் சுமூக தீர்வாக மயானப்பாதைக்கான இடம் ஒதுக்கப்பட்டு எஞ்சிய நிலம் வீட்டுமனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி பதட்டம் ஏற்படுத்திய பாதை பிரச்னையும் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !