மேலும் செய்திகள்
போக்சோ கைதி தப்பி ஓட்டம்
10-Jan-2025
சாணார்பட்டி : சாணார்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவரை டிச.19ல் மாலைமேடு புதுாரை சேர்ந்த மனோஜ் 30, கடத்தி கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமியை காணாமல் தேடி வந்த பெற்றோரிடம் மனோஜ் சிக்கினார். அப்போது சிறுமியின் உறவினர்கள் மனோஜை,பிடித்து தர்ம அடி கொடுத்தனர். காயமடைந்த மனோஜ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். ஜன.9ல் அரசு மருத்துவமனையிலிருந்து மனோஜ், தப்பினார். டி.எஸ்.பி.,சிபி சாய் சவுந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தப்பி ஓடிய மனோஜை,தேடினர்.சிலுவத்துார் பஸ் ஸ்டாப் அருகே பதுங்கியிருந்த மனோஜை,போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே மனோஜ் மீது ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
10-Jan-2025