உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் நாளையே வந்தாலும் அமோக வெற்றி பெறுவோம்; அமைச்சர் பெரியசாமி பேட்டி

தேர்தல் நாளையே வந்தாலும் அமோக வெற்றி பெறுவோம்; அமைச்சர் பெரியசாமி பேட்டி

திண்டுக்கல் : ''லோக்சபா தேர்தல் நாளையே வந்தாலும் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்,''என, திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி கூறினார்.அவர் கூறியதாவது: மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தி.மு.க., கூட்டணியின் பிரசாரம் இருக்கும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அதனை வீழ்த்த இண்டியா என்ற கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 35 ஆண்டுகளுக்கு பின் களம் இறக்கப்பட்டுள்ளது. அக்கட்சி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவ கொள்கையை கொண்டுள்ளது. இந்த தேர்தலிலும் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அக்கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை