மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த டிஸ்கோ கத்தரி
28-Aug-2024
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், வெரியப்பூர், பொருளூர் பகுதிகளில் அதிக நிலப்பரப்பில் பீட்ரூட் நடவு செய்யப்பட்டுள்ளது.அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் மார்க்கெட்டுக்கும் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.7க்கு விற்பனையாகிறது. இந்த விலையானது கட்டுப்படியானதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.புதுக்காளாஞ்சிபட்டி விவசாயி சகுந்தலா தேவி: விதைப்பது, நடவு கூலி, களையெடுத்தல், உரமிடுதல், அறுவடை கூலி என ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. விற்கும் விலை கட்டுபடியானதாக இல்லை. கிலோ பீட்ரூட் ரூ.20க்கு மேல் விற்றால் மட்டுமே செலவு செய்த பணம் கிடைக்கும் என்றார்.
28-Aug-2024