உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து லீக் போட்டி பண்ணை பப்ளிக் அணி வெற்றி

கால்பந்து லீக் போட்டி பண்ணை பப்ளிக் அணி வெற்றி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் இணைந்து நடத்திய ஓட்டல் ஸ்வாகத் கோப்பை 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டியில் பண்ணை பப்ளிக் அணி வெற்றி பெற்றது.பார்வதீஸ் அனுகிரஹா மைதானத்தில் மார்ச்15ல் தொடங்கிய இப்போட்டியில் பண்ணை பப்ளிக் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஷவினேஷ், ஜாய்தாமஸ் கோல் அடித்தனர்.செயின்ட் மேரிஸ் பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 4:1 என்ற கோல் கணக்கில் வென்றது. ப்ரெட்டிலே, கபிலேஸ், கவிஷ், லிங்கேஷ் கோல் அடித்தனர்.அக்சுதா அகாடமி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரமம் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. ரிடிகேஷ், சபரி, டானேஷ் கோல் அடித்தனர்.எஸ்.பி.சி., அகாடமி அணிக்கு எதிரான போட்டியில் 9:2 என்ற கோல் கணக்கில் செயின்ட் மேரிஸ் அணி வென்றது. ரோஷன் 5, ஆண்டோ 2, ஜோவின், நிவிஸ் தலா ஒரு கோல் அடித்தனர். பிரஸித்தி வித்தோயதா சீனியர் பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் 8:0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி அணி வென்றது. பிரனேஷ், ரித்திஷ்குமார் தலா 3, விமிதரன் 2 கோல்கள் அடித்தார்.அன்னை வேளாங்கண்ணி பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி அணி 6:0 என்ற கோல் கணக்கில் வென்றது. கவின்பாண்டி, ரோவந்த், அக்ஸத்ராஜன்டுடோ, ருகன்ஜெய் கோல்கள் அடித்தனர்.ரேடியன்ஸ் பப்ளிக் பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் 4:1 என்ற கோல் கணக்கில் பிரஸித்தி வித்யோதயா சீனியர் அணி வென்றது. முகுந்தன், சித்தேஷ் தலா 2 கோல்கள் அடித்தனர்.அண்ணை வேளாங்கண்ணி பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு பள்ளி 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. வசந்த் 3, யூசுப், வாசு கோல் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை